உள்ளடக்கத்துக்குச் செல்

ஓ மணப்பெண்ணே!

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓ மணப்பெண்ணே!
இயக்கம்கார்த்திக் சுந்தர்
திரைக்கதைதீபக் சுந்தர்ராஜன்ரமெநெஷ் வர்மா பென்மெஸ்தா
இசைவிஷால் சந்திரசேகர்
நடிப்புஹரீஷ் கல்யாண்
பிரியா பவானி சங்கர்
ஒளிப்பதிவுகிருஷ்ணன் வசந்த்
படத்தொகுப்புகிருபாகரன்
கலையகம்எ ஸ்டுடியோ எல்எல்பி
எ ஹவிஷ் புரொடக்சன்
ச்.பி சினிமாஸ்
மாதவ் மீடியா
தேர்டு ஐ என்டர்டெயின்மென்ட்
விநியோகம்ஹாட் ஸ்டார்
வெளியீடு22 அக்டோபர் 2021 (2021-10-22)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஓ மணப்பெண்ணே! ( Oh Manapenne!) தீபக் சுந்தர்ராஜன் எழுதி, கார்த்திக் சுந்தர் இயக்கி வரவிருக்கும் இந்தியத் தமிழ் மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். பெல்லி சூப்புலு (2016) என்ற தெலுங்கு படத்தின் மறு ஆக்கமான, இதில் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு திசம்பர் 2019இல் தொடங்கி பிப்ரவரி 2020 இல் முடிவடைந்தது. இது 22 அக்டோபர் 2021 அன்று ஹாட் ஸ்டார் வழியாக வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

அக்டோபர் 2016 இன் பிற்பகுதியில், பெல்லி சூப்புலு (2015) என்ற தெலுங்குத் திரைப்படத்தை தமிழில் மறு ஆக்கம் செய்யும் உரிமையை கௌதம் வாசுதேவ் மேனன் தனது ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட்டின் கீழ் வாங்கினார். இந்தப் படத்திற்கு 'பொன் ஒன்று கண்டேன்' என்று பெயரிடப்பட்டது. மேலும் மேனனின் உதவியாளர் செந்தில் வீராசாமி இயக்கவிருந்தார். மார்ச் 2017 இல், மேனன் விஷ்ணு விஷால் மற்றும் தமன்னாவை முன்னணி நடிகர்களாக தேர்வு செய்தார். எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தர்புகா சிவா மற்றும் பிரவீன் ஆண்டனி முறையே இசையமைப்பாளராகவும், படத் தொகுப்பாள்கராகவும் இருந்தனர். ஜூலை அல்லது ஆகஸ்ட் 2017இல் படப்பிடிப்பு தொடங்கும் என்று விஷால் எதிர்பார்த்தார் இருப்பினும், படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.[1] இறுதியில் திசம்பரில், தாமதம் காரணமாக புதிய தேதிகளை ஒதுக்க முடியாததால், விஷால் திட்டத்தில் இருந்து விலகினார். விஷால் வெளியேறிய பிறகு படத்தின் முன்னணி நடிகர்கள் மீது நிலவும் நிச்சயமற்ற தன்மையைத் தொடர்ந்து,[2] செலவுக் கட்டுப்பாடுகள் காரணமாக மேனனை பாதியிலேயே திட்டத்தை கைவிடத் தூண்டியது..

நவம்பர் 2019 இல், ஹரிஷ் கல்யாண் முன்னணி நடிகராக அறிவிக்கப்பட்டார். மேலும் ஒரு மாதம் கழித்து பிரியா பவானி சங்கர் முன்னணி நடிகையாக அறிவிக்கப்பட்டார்.[3][4][5][6] இந்த திரைப்படம் நாடக நடிகர் அபிஷேக் குமாரின் அறிமுகமாக இருந்தது.[7]

முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி 11 திசம்பர் 2019 அன்று தொடங்கியது. 2020 இந்தியாவில் கொரோனாவைரசால் நாடுதழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு பிப்ரவரி 2020இல் படப்பிடிப்பு முடிவடைந்தது.[8] படப்பிடிப்பு முடிந்து தயாரிப்புக்கு பிந்தைய பணிகள் தொடங்கியுள்ளன.

இசை

[தொகு]

படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.[9] இது நான்கு பாடல்கள் மற்றும் இரண்டு கருவியிசைகளைக் கொண்டுள்ளது. "சோம்பேறி பாடல்" பாடல் கர்நாடக இசை மேற்கத்திய புளூஸ் மற்றும் ஜாஸ் வகைகளுடன் இணைகிறது. இது 26 பிப்ரவரி 2021 அன்று தனிப்பாடலாக வெளியிடப்பட்டது. மற்றொரு தனிப்பாடலான "போதை கனமே" 30 ஜூலை 2021 அன்று வெளியிடப்பட்டது.[10] மூன்றாவது தனிப்பாடலான "ஆவோ ஜி ஆவோ" 15 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது [11]

வெளியீடும் வரவேற்பும்

[தொகு]

ஓ மணபெண்ணே! ஹாட் ஸ்டார் வழியாக 22 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது.[12] தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த எம். சுகந்த், தெலுங்கு அசல் படத்தைப் போலவே "வசீகரமான மற்றும் மகிழ்ச்சிகரமான ஒரு தகுதியான மறு ஆக்கம் " என்று எழுதினார்.[13][14]

சான்றுகள்

[தொகு]
  1. "'Pellichoopulu' Tamil remake to roll from November". தி நியூஸ் மினிட். 21 October 2017. Archived from the original on 12 February 2021. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
  2. Pudipeddi, Haricharan (30 December 2017). "Pon Ondru Kanden: Vishnu Vishal opts out of Pellichoopulu's Tamil remake; future of the film uncertain". Firstpost. Archived from the original on 12 February 2021. பார்க்கப்பட்ட நாள் 11 February 2021.
  3. "Priya Bhavani Shankar part of Pelli Choopulu Tamil remake". 11 December 2019. https://www.cinemaexpress.com/stories/news/2019/dec/11/priya-bhavani-shankar-part-of-pelli-choopulu-tamil-remake-15995.html. 
  4. "Harish Kalyan to star in 'Pelli Choopulu' Tamil remake". 11 December 2019. https://www.thehindu.com/entertainment/movies/harish-kalyan-to-star-in-pelli-choopulu-tamil-remake/article30275260.ece. 
  5. "Harish impresses Oh Manapenne unit with his culinary skills". 5 August 2021 இம் மூலத்தில் இருந்து 5 ஆகஸ்ட் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210805071746/https://www.dtnext.in/News/Cinema/2021/08/05004130/1310263/Harish-impresses-Oh-Manapenne-unit-with-his-culinary-.vpf. 
  6. "Harish Kalyan learnt cooking to play a chef in Oh Manapenne". 7 August 2021. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/harish-kalyan-learnt-cooking-to-play-a-chef-in-oh-manapenne/articleshow/85132004.cms. 
  7. Ganguly, Shrija (10 January 2021). "Journey to the Big Screen from Theatre Via Comedy: 'Accidental' Comedian Abishek Kumar on His Foray into Tamil Cinema". Silverscreen India. Archived from the original on 24 June 2021. பார்க்கப்பட்ட நாள் 18 June 2021.
  8. "Shoot wrapped for Tamil remake of 'Pelli Choopulu'!". சிஃபி. 26 February 2020. Archived from the original on 5 March 2020. பார்க்கப்பட்ட நாள் 29 June 2020.
  9. "Oh Manapenne (2021)". Raaga.com. Archived from the original on 19 October 2021. பார்க்கப்பட்ட நாள் 19 October 2021.
  10. "Second single Bodhai Kaname from Harish Kalyan's Oh Manapenne". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 30 July 2021. Archived from the original on 2 August 2021. பார்க்கப்பட்ட நாள் 1 August 2021.
  11. Think Music India (15 October 2021). "Aao Ji Aao Lyric Video | Oh Manapenne | Harish Kalyan | Priya Bhavanishankar | Kaarthikk Sundar". YouTube. பார்க்கப்பட்ட நாள் 15 October 2021.
  12. "'Oh Manapenne' to premiere on Disney + Hotstar on October 22". சிஃபி. 12 October 2021. Archived from the original on 12 October 2021. பார்க்கப்பட்ட நாள் 12 October 2021.
  13. Suganth, M (21 October 2021). "Oh Manapenne! Review: Oh Manapenne! is a well-cast remake that's as charming as Pelli Choopulu". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 21 October 2021. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
  14. Aiyappan, Ashameera (22 October 2021). "Oh Manapenney movie review: Harish Kalyan, Priya Bhavanishankar lead a faithful remake". Firstpost. Archived from the original on 22 October 2021. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ_மணப்பெண்ணே!&oldid=3743587" இலிருந்து மீள்விக்கப்பட்டது